வெப்பமயமாதல்
ஓர் இடத்தின் தட்ப வெப்பநிலை
என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாம் அனுபவிக்கும் சராசரியான கால நிலையைக்
குறிப்பது. பூமியில் பலவிதமான தட்பவெப்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. அனைத்து வகையான
உயிரினங்களும் அவற்றுக்கேற்ப இயல்பாகத் தம்மைத் தக்கவைத்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் கடந்த 150-200
ஆண்டுகளில் தட்பவெப்பநிலை மாற்றங்கள் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பட்டுவருகின்றன.
சில குறிப்பிட்ட தாவர மற்றும் விலங்கினங்கள் இப்படிப்பட்ட மாற்றங்களுக்கேற்பத்
தகவமைத்துக்கொள்ள முடிவதில்லை. மனிதனுடைய நடவடிக்கைகளே இப்படிப்பட்ட மாற்றங்கள்
இவ்வளவு வேகமாக நடைபெறுவதற்கான காரணம் என்று கருதப்படுகிறது.
பசுமை இல்ல விளைவு
பூமி, சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது. இது பூமியின் நிலப்பரப்பை வெப்பமாக்குகிறது. இந்த ஆற்றல் வாயு மண்டலத்தினூடே கடந்து செல்கையில், இதன் ஒரு குறிப்பிட்ட அளவு (சுமார் 30%) சிதறுண்டுபோகிறது. பூமியிலிருந்தும், கடல் பரப்பிலிருந்தும் இந்த ஆற்றலின் ஒரு பகுதி, வாயு மண்டலத்திற்குள் பிரதிபலிக்கப்படுகிறது. வாயுமண்டலத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு விதமான போர்வை போர்த்தியது போன்று பரவியுள்ளன. அவை, கார்பன்-டை- ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு. இவைதான் ‘பசுமை இல்ல வாயுக்கள்’ (கிரீன்- ஹவுஸ் வாயுக்கள்) என்று அழைக்கப்படுகின்றன. பசுமை இல்ல (கிரீன்- ஹவுஸ்) வாயுக்கள், நீராவியுடன் சேர்ந்து வாயு மண்டலத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. இவை வாயு மண்டலத்தில் பிரதிபலிக்கப்படுகிற ஆற்றலிருந்து சிறிதளவைக் கிரகித்துக்கொள்கிறது. எப்படிப் பசுமை இல்லத்தின் கண்ணாடி சூரியக் கதிரியக்கத்தின் அதிகப்படியான ஆற்றலைத் தடுக்கிறதோ, அப்படியே இந்த ‘வாயுப் போர்வை’ பூமியில் வெளிப்படுத்தப்படும் சக்தியை கிரகித்துக்கொண்டு வெப்பநிலை அளவுகளைத் தக்க வைத்துக்கொள்கிறது. இதனால் இது ‘பசுமை இல்ல விளைவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஜீன் - பாப்டிஸ்ட் ஃபோரியர் என்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானி இந்த பசுமை இல்ல விளைவை (கிரீன்- ஹவுஸ் விளைவு) முதன் முதலாக அடையாளம் கண்டவர். அவர் வாயுமண்டலத்தின் நிகழ்வு மற்றும் கிரீன்ஹவுஸ் நிகழ்வின் ஒற்றுமையைச் சுட்டிக் காட்டினார்.
கிரீன் ஹவுஸ் வாயுக்களாளான போர்வை, உலகம் உருவானதிலிருந்தே உள்ளன. ஆனால் மனித குலத்தின் நடவடிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க, இந்தக் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகமதிகமாக வாயு மண்டலத்திற்குள் விடப்படுகின்றன. இதன் விளைவாக, இந்தப் போர்வை தடிமனாகிக்கொண்டிருக்கிறது. இது ‘இயற்கையான கிரீன்ஹவுஸ் விளைவை’ பாதிக்கிறது.
நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருட்களை நாம் எரிக்கும்போது, கார்பன் - டை - ஆக்ஸைடு (கரிம வாயு) வெளியேற்றப்படுகிறது. மற்றும் நாம் காடுகளை அழிக்கும்போது, மரங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கார்பன் வாயு மண்டலத்தில் கார்பன் - டை - ஆக்ஸைடாகக் கலக்கிறது. அதிகரித்துவரும் விவசாய நடவடிக்கைகள், நிலத்தைப் பயன்படுத்தும் முறையில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் வேறுசில நடவடிக்கைகள் இவை அனைத்தும் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுக்களின் அளவுகளை அதிகரிக்கச் செய்கின்றன. தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளும் செயற்கையான மற்றும் புதிய கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அதாவது CFCக்கள் (க்ளோரோஃபுளூரோ கார்பன்கள் (Chlorofluorocarbons) போன்றவற்றை வெளியேற்றுகின்றன. மோட்டார் வாகனங்கள் வெளியேற்றும் புகை ஓஸோனை அதிகரிக்கச் செய்கின்றன. அதிகரிக்கப்பட்ட வரும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்கிறது.

இவ்வெப்பநிலை மாற்றத்தினால் பூமியில் பல்வேறு பதிப்புகள் ஏற்படும். குறிப்பாக கடல் மட்டம் அதிகரிக்கும். பல நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். நாட்டில் மழை வளம் குறையும். இதனால் உணவு சார்ந்த உற்பத்திகள் குறைந்து, உயிரிழப்புகள் ஏற்படும்.
இவ்விளைவினைக் கட்டுப்படுத்த, மரங்களை வளர்ப்பதே ஒரே தீர்வாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எரிபொருட்களின் அளவை குறைக்க முடியுமே தவிர அதற்கு ஒரு மாற்று உருவாக்கப்படும் வரை அதனை முற்றிலும் தவிர்க்க முடியாது. எனவே மரம் வளர்ப்பதே சிறந்தது.
மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்...
மரங்களே தெய்வம்... (தொடரும்...)
No comments:
Post a Comment