பகவத் கீதைக்கு பணிந்து பொய் சொல்ல மாட்டான் என்றால் அவன் கடவுளுக்கு பயந்து அந்த குற்றத்தை செய்திருக்கவே மாட்டான்.#நீதிமன்ற சத்தியம்.
ஓவ்வொரு முறை என் தாயுடன் கோயிலுக்கு செல்லும் போதும், கோயில் சிலையிடம் காட்டிவிட்டு வருகிறேன் என் கடவுளை..
உண்மையில் சிறுபிள்ளைத்தனமானவர் கடவுள்; கடவுள்தனமானவர்கள் சிறுபிள்ளைகள்.!
பிறந்ததிலிருந்து கடவுள் பக்தியும், பள்ளியிலிருந்து தேச பக்தியும் நாம் விரும்பாவிட்டாலும் நம் மீது திணிக்கப்படுகிறது
தட்டிக் கேட்கத் திராணியற்ற, Multiple personality disorder உள்ள யாரோ ஒருவர் தான் கடவுளைப் படைத்திருக்க வேண்டும்.
பாவத்தின் சம்பளமே மரனம் எனில், என்னை பாவம் செய்ய படைத்த கடவுளை கொல்லுங்கள் முதலில்....
தண்டவாளத்தில் தலைசாய்த்துப் பூத்திருக்கும் ஒற்றைப்பூ என் காதல். நீ நடந்து வருகிறாயா.. ரயிலில் வருகிறாயா? -பழனிபாரதி
விருந்தாளிகளிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது சாக்லேட் மட்டுமே, ரைம்ஸ் சொல்லு என்ற கேள்வியை அல்ல .
உண்மையான காதல் தோற்பதில்லை,உண்மையானவர்களை தேர்ந்தெடுப்பதில்தான் தோற்கிறோம்.
‘மெய்’யாலுமே உன்னை விரும்புகிறேன் என்பது காதலைச் சொல்வதற்கு மிக மோசமான வார்த்தைத் தேர்வு
எனது கவிதைகளால்தான் அவள் என்னைக் காதலிக்கிறாள் என்றாள்.. அவளுக்கு நான் இரண்டாவது காதலனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.
பேச்சில் மயங்கி காதலிப்பது பெண்கள், அழகில் மயங்கி காதலிப்பது ஆண்கள்! அதனால்தான் பெண்கள் மேக்கப்பையும் ஆண்கள் பொய்பேசுவதையும் விடமுடிவதில்லை
'கொஞ்சம் மனசு விட்டு பேசணும்' னு ஆரம்பிச்சு... இறுதியில் நிறைய பேர் 'மனசு விட்டு போச்சு'னு திரியறாங்க:-) #காதல்
ஒருவனை பிடித்து காதலிக்கும் பெண்கள் பாதி, இன்னொருவனை வெறுப்பேத்த காதலிக்கும் பெண்கள் மீதி.
சரியான சில்லறை தரும் கடைக்காரரின் நேர்மை, சாக்லேட்டை எதிர்பார்த்த என் பையனை ஏமாற்றுகிறது .
Thanks to my twitterers
No comments:
Post a Comment