Wednesday, 19 September 2012

பிள்ளையார் (ஒருபக்க கதை)

"விநாயகனே வினைத்தீர்ப்பவனே..." கணேசனின் செல்போன் ஒலித்தது. தன் வீட்டிலிருந்து அழைப்பு வருவதைக் கண்டவன் அழைப்பைப் பதட்டத்துடன் ஏற்றான்.

"என்னம்மா?..." குரல் தழுதழுத்தது.

"எங்கப்பா இருக்க?..."  மெல்லிய குரலில் அவன் தாய்.

"பக்கத்துத்தெரு பிள்ளையார்க் கோயில்ல இருக்கேம்மா. ஏம்மா கேக்குற?"

"உனக்கு ரிஜிஸ்டர் தபால் வந்திருக்குப்பா. நீதான் வாங்கனுமாம். உடனே வாப்பா..."

"சரி! இதோ வர்றேன்."
அழைப்பைத் துண்டித்தவன் பிள்ளையாரிடம்
"இதோ பாரு பிள்ளையாரே! கோர்ட்லேருந்துதான் தபால் வந்திருக்கும். எங்களுக்குச் சாதகமாதான் இருக்கனும்."  வேண்டிக்கொண்டே ஒருவித பயத்துடன் வீட்டிற்கு கிளம்பினான்.

வீட்டிற்கு விரைவாய் வந்தவனுக்குப் பிள்ளையார் தன்னை ஏமாற்றி விடமாட்டார் என்ற எண்ணத்தோடேயே தபாலை வாங்கிப் படித்தான்.

படித்தவனுக்கு அதிர்ச்சி. அதில் "கோர்ட் உத்தரவுப்படி தாங்கள் வசிக்கும் இடம் அரசு புறம்போக்கு இடம் என்பதால் இந்தத் தபால் கிடைத்த 15 நாட்களுக்குள் இடத்தைக் காலி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று எழுதியிருந்தது.

அவன் கண்களில் கண்ணீர் பொங்கியது. ஆத்திரத்தோடு தன்னை ஏமாற்றிய பிள்ளையாரை நோக்கி விரைந்தான்.

அங்கே அவன் கண்ட காட்சி அவனைச் சற்று அமைதியாக்கியது.

சாலை விரிவாக்கப் பணிக்காக நடுத்தெருவிலிருந்த அந்தப் பிள்ளையார்க் கோயிலை அதிகாரிகள் சில ஆட்களோடு இடித்துக் கொண்டிருந்தார்கள்.

"உனக்காவது நோட்டீஸ் கொடுத்தார்கள். எனக்கு அதுவும் இல்லை" என பிள்ளையார் தன் நிலைமையை அவனுக்குச் சொல்வதுபோல் இருந்தது.

கருத்தும் எழுத்தும்
செ.ஆனந்தராஜா.

Published with Blogger-droid v2.0.9

Wednesday, 29 August 2012

பிச்சைக்காரன் (சிறுகதை)


ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகள். நகரம் என்பதற்கு சான்றாக எங்கும் ஹாரன் ஒலிகள். இரு மூத்திர சுவற்றிற்கு இடையில் பளபளப்பான தார் ரோடுகள். ரோட்டின் ஒரு பக்கத்தில் மின்விளக்குக் கம்பத்தின் கீழே படுத்திருந்தான் அந்தப் பிச்சைக்காரன். அவனைப் பார்த்தாலே ஏதேனும் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அவனின் மெல்லிய வயிறு. எலும்புகள் எட்டிப்பார்ப்பதைத் தடுக்கும் தோல். தலைக்கும் தாடைக்கும் நீண்ட செம்பட்டை நிற முடிகள். கறையோடு கிழிந்த வேட்டி. அதை கீழே விழாதபடி பிடித்திருக்கும் அரைஞான் கயிறு. தோளில் நீண்ட பை. கையில் தட்டும் கைத்தடியும். இவையே அவனது சொத்துகள்.நீண்ட பையில் நிறைய பிளாஸ்டிக் குப்பைகள். தன்னால் உலகிற்கு நன்மை செய்யமுடியும் என நினைத்து நினைத்துப் பொறுக்கியவை அவைகள்.  பல சமயத்துல அவன் தனக்குத்தனே பேசிப்பான். அதனால் சில பேர் அவனைப் பைத்தியம்னு சொல்லுவாங்க.


தனக்கு மிஞ்சி தானம்னு கொடுக்கிறவங்க சில பேர் இருக்கிறாங்கங்கிறது என்பது அவன் தட்டில் சிதறியுள்ள சில்லரையைப் பார்த்தாலே தெரியும். இரண்டு ரூபாதான் அதிகபட்ச காசு, பணம் எல்லாம்.  தட்டைப் பார்க்கும்போதெல்லாம் தான் வறுமைக்குக் கீழ இல்லங்கிற மமதை அவனுக்கு .நமட்டுச் சிரிப்பு வேற.

பின்னே இருக்காதா.

நகரத்துல இருபத்தெட்டு ரூபாக்கு கீழ சம்பாதிக்கிறவன்தான் வறுமையில இருக்கானாம். அரசாங்கம் சொல்லுது.  அவனுக்கு அது தெரியும்.  அதான் அந்த நமட்டுச் சிரிப்பு.

ஒருமுறை  ஒருத்தன் ஏசுனது அவனுக்கு ஒருமாதியாதான் போச்சு.

"உழச்சி தின்னாம பிச்சை எடுக்குது"னு பேசிட்டான். வந்துச்சே அவனுக்குக் கோபம்

"நீ எவ்ளவுடா சம்பாதிக்கிற? எவ்ளவு சம்பாதிச்சப்புறம் பிச்சைப்போடுவ? நீயெல்லாம் எவ்ளவு சம்பாதிச்சாலும் உனக்குப் பத்தாதடா! நீ என்னவிட பெரிய பிச்சைக்காரன்டா"னு எதிர்த்துப் பேசினதிக்கப்புறம்தான் அவனுக்குத் திருப்தியாச்சு.

"நானென்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா?" தனக்குத்தானே பேச ஆரம்பித்தான்.

நேத்திக்கு அவனுக்கு இதைவிட பெரிய கோபம். பள்ளிக்கூடப் பக்கம் பிச்சை எடுக்கும்போது ஒரு வாத்தியாரு பாடம் நடத்துறத கேட்டிருக்கான்.   " அறம் செய்ய விரும்பு"னு சொல்லித்தராறேனு அவர்ட்ட கேட்ருக்கான்.

"சில்லறை இல்ல"ன்னு சொல்லிட்டான்.

"வேணும்னா சில்லறய என் தட்டிலருந்து பொறுக்கிக்கோ!"னு காட்டமாகவே கத்திவிட்டான் பிச்சைக்காரன்.

"யாரும் சொல்லிக்கொடுப்பது போல வாழறதில்ல.

வாழறதுக்கு ஏத்தாமாதிரி சொல்லித் தரதும் இல்ல" 

அவன் வாயிலிருந்து தத்துவங்கள் உதிர்ந்தன.


உச்சி வெயில். அவன் கால்கள் நிழலைத் தேடியது. செருப்பும் இல்லியே.

" ஒருவேள எங்களுக்கெல்லாம் ஓட்டுரிமை இருந்திருந்தா, செருப்பு, தட்டெல்லாம் இலவசமா கிடச்சிருக்கும்"  புலம்பல் அரசியல் பக்கம் திரும்பியதில் ஆச்சரியமில்லை. 

"ஒதுங்கி நிற்க மரமும் இல்ல. இந்தக் கால்த்து அசோகரெலாம் மரத்த வெட்டுறதுலயே குறிக்கோளா இருக்கானுங்க.  என்னமாதிரி அவனவன் புள்ளக்குட்டியெல்லாம் மரம், காத்து இல்லாம கஷ்டப்படப் போகுது. அப்ப நான் உசுரோட இருக்கமாட்டேன். ஆமா..மாம்.. இந்த மரணம்தான் எல்லாருக்கும் பொதுவா இருக்கு. இது இல்லாட்டி.. அய்யயோ.. நினச்சிப்பாரு. வெயில் இன்னும் கொளுத்திருக்கும்"

புலம்பிக்கொண்டே மேலே பார்த்தான். வெயில் சற்று உள்வாங்கியது.

கருத்தும் எழுத்தும் செ.ஆனந்தராஜா, மயிலாடுதுறை .

Wednesday, 25 April 2012

மரங்களே தெய்வம்...


வெப்பமயமாதல்

ஓர் இடத்தின் தட்ப வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாம் அனுபவிக்கும் சராசரியான கால நிலையைக் குறிப்பது. பூமியில் பலவிதமான தட்பவெப்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. அனைத்து வகையான உயிரினங்களும் அவற்றுக்கேற்ப இயல்பாகத் தம்மைத் தக்கவைத்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் கடந்த 150-200 ஆண்டுகளில் தட்பவெப்பநிலை மாற்றங்கள் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பட்டுவருகின்றன. சில குறிப்பிட்ட தாவர மற்றும் விலங்கினங்கள் இப்படிப்பட்ட மாற்றங்களுக்கேற்பத் தகவமைத்துக்கொள்ள முடிவதில்லை. மனிதனுடைய நடவடிக்கைகளே இப்படிப்பட்ட மாற்றங்கள் இவ்வளவு வேகமாக நடைபெறுவதற்கான காரணம் என்று கருதப்படுகிறது.

பசுமை இல்ல விளைவு

பூமி, சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது. இது பூமியின் நிலப்பரப்பை வெப்பமாக்குகிறது. இந்த ஆற்றல் வாயு மண்டலத்தினூடே கடந்து செல்கையில், இதன் ஒரு குறிப்பிட்ட அளவு (சுமார் 30%) சிதறுண்டுபோகிறது. பூமியிலிருந்தும், கடல் பரப்பிலிருந்தும் இந்த ஆற்றலின் ஒரு பகுதி, வாயு மண்டலத்திற்குள் பிரதிபலிக்கப்படுகிறது. வாயுமண்டலத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு விதமான போர்வை போர்த்தியது போன்று பரவியுள்ளன. அவை, கார்பன்-டை- ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு. இவைதான் ‘பசுமை இல்ல வாயுக்கள்’ (கிரீன்- ஹவுஸ் வாயுக்கள்) என்று அழைக்கப்படுகின்றன. பசுமை இல்ல (கிரீன்- ஹவுஸ்) வாயுக்கள், நீராவியுடன் சேர்ந்து வாயு மண்டலத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. இவை வாயு மண்டலத்தில் பிரதிபலிக்கப்படுகிற ஆற்றலிருந்து சிறிதளவைக் கிரகித்துக்கொள்கிறது. எப்படிப் பசுமை இல்லத்தின் கண்ணாடி சூரியக் கதிரியக்கத்தின் அதிகப்படியான ஆற்றலைத் தடுக்கிறதோ, அப்படியே இந்த ‘வாயுப் போர்வை’ பூமியில் வெளிப்படுத்தப்படும் சக்தியை கிரகித்துக்கொண்டு வெப்பநிலை அளவுகளைத் தக்க வைத்துக்கொள்கிறது. இதனால் இது ‘பசுமை இல்ல விளைவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜீன் - பாப்டிஸ்ட் ஃபோரியர் என்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானி இந்த பசுமை இல்ல விளைவை (கிரீன்- ஹவுஸ் விளைவு) முதன் முதலாக அடையாளம் கண்டவர். அவர் வாயுமண்டலத்தின் நிகழ்வு மற்றும் கிரீன்ஹவுஸ் நிகழ்வின் ஒற்றுமையைச் சுட்டிக் காட்டினார்.

கிரீன் ஹவுஸ் வாயுக்களாளான போர்வை, உலகம் உருவானதிலிருந்தே உள்ளன. ஆனால் மனித குலத்தின் நடவடிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க, இந்தக் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அதிகமதிகமாக வாயு மண்டலத்திற்குள் விடப்படுகின்றன. இதன் விளைவாக, இந்தப் போர்வை தடிமனாகிக்கொண்டிருக்கிறது. இது ‘இயற்கையான கிரீன்ஹவுஸ் விளைவை’ பாதிக்கிறது.

நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருட்களை நாம் எரிக்கும்போது, கார்பன் - டை - ஆக்ஸைடு (கரிம வாயு) வெளியேற்றப்படுகிறது. மற்றும் நாம் காடுகளை அழிக்கும்போது, மரங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கார்பன் வாயு மண்டலத்தில் கார்பன் - டை - ஆக்ஸைடாகக் கலக்கிறது. அதிகரித்துவரும் விவசாய நடவடிக்கைகள், நிலத்தைப் பயன்படுத்தும் முறையில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் வேறுசில நடவடிக்கைகள் இவை அனைத்தும் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுக்களின் அளவுகளை அதிகரிக்கச் செய்கின்றன. தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளும் செயற்கையான மற்றும் புதிய கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அதாவது CFCக்கள் (க்ளோரோஃபுளூரோ கார்பன்கள் (Chlorofluorocarbons) போன்றவற்றை வெளியேற்றுகின்றன. மோட்டார் வாகனங்கள் வெளியேற்றும் புகை ஓஸோனை அதிகரிக்கச் செய்கின்றன. அதிகரிக்கப்பட்ட வரும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்கிறது.

இவ்வெப்பநிலை மாற்றத்தினால் பூமியில் பல்வேறு பதிப்புகள் ஏற்படும். குறிப்பாக கடல் மட்டம் அதிகரிக்கும். பல நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். நாட்டில் மழை வளம் குறையும். இதனால் உணவு சார்ந்த உற்பத்திகள் குறைந்து, உயிரிழப்புகள் ஏற்படும்.



இவ்விளைவினைக் கட்டுப்படுத்த, மரங்களை வளர்ப்பதே ஒரே தீர்வாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எரிபொருட்களின் அளவை குறைக்க முடியுமே தவிர அதற்கு ஒரு மாற்று உருவாக்கப்படும் வரை அதனை முற்றிலும் தவிர்க்க முடியாது. எனவே மரம் வளர்ப்பதே சிறந்தது.

மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்...



மரங்களே தெய்வம்... (தொடரும்...)


Tuesday, 24 April 2012

என் வலைப்பாயுதே...

பகவத் கீதைக்கு பணிந்து பொய் சொல்ல மாட்டான் என்றால் அவன் கடவுளுக்கு பயந்து அந்த குற்றத்தை செய்திருக்கவே மாட்டான்.#நீதிமன்ற சத்தியம்.


ஓவ்வொரு முறை என் தாயுடன் கோயிலுக்கு செல்லும் போதும், கோயில் சிலையிடம் காட்டிவிட்டு வருகிறேன் என் கடவுளை..


உண்மையில் சிறுபிள்ளைத்தனமானவர் கடவுள்; கடவுள்தனமானவர்கள் சிறுபிள்ளைகள்.!


பிறந்ததிலிருந்து கடவுள் பக்தியும், பள்ளியிலிருந்து  தேச பக்தியும் நாம் விரும்பாவிட்டாலும் நம் மீது திணிக்கப்படுகிறது


தட்டிக் கேட்கத் திராணியற்ற, Multiple personality disorder உள்ள யாரோ ஒருவர் தான் கடவுளைப் படைத்திருக்க வேண்டும்.


பாவத்தின் சம்பளமே மரனம் எனில், என்னை பாவம் செய்ய படைத்த கடவுளை கொல்லுங்கள் முதலில்....


தண்டவாளத்தில் தலைசாய்த்துப் பூத்திருக்கும் ஒற்றைப்பூ என் காதல். நீ நடந்து வருகிறாயா.. ரயிலில் வருகிறாயா? -பழனிபாரதி


விருந்தாளிகளிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது சாக்லேட் மட்டுமே, ரைம்ஸ் சொல்லு என்ற கேள்வியை அல்ல .


உண்மையான காதல் தோற்பதில்லை,உண்மையானவர்களை தேர்ந்தெடுப்பதில்தான் தோற்கிறோம்.


‘மெய்’யாலுமே உன்னை விரும்புகிறேன் என்பது காதலைச் சொல்வதற்கு மிக மோசமான வார்த்தைத் தேர்வு


எனது கவிதைகளால்தான் அவள் என்னைக் காதலிக்கிறாள் என்றாள்.. அவளுக்கு நான் இரண்டாவது காதலனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.


பேச்சில் மயங்கி காதலிப்பது பெண்கள், அழகில் மயங்கி காதலிப்பது ஆண்கள்! அதனால்தான் பெண்கள் மேக்கப்பையும் ஆண்கள் பொய்பேசுவதையும் விடமுடிவதில்லை


'கொஞ்சம் மனசு விட்டு பேசணும்' னு ஆரம்பிச்சு... இறுதியில் நிறைய பேர் 'மனசு விட்டு போச்சு'னு  திரியறாங்க:-) #காதல்


ஒருவனை பிடித்து காதலிக்கும் பெண்கள் பாதி, இன்னொருவனை வெறுப்பேத்த காதலிக்கும் பெண்கள் மீதி.


சரியான சில்லறை தரும் கடைக்காரரின் நேர்மை, சாக்லேட்டை எதிர்பார்த்த என் பையனை ஏமாற்றுகிறது .


Thanks to my twitterers


Published with Blogger-droid v2.0.4

Sunday, 22 April 2012

என் வலைப்பாயுதே...

ஈழத்தின் வாழ்வுதனைச் சிங்களம் கவ்வும்.

இறுதியில் ஈழமே வெல்லும்.


முக்தியடைய போதி மரத்தை தேடி போகவேண்டுமா இல்லை புத்தரை தேடி போகவேண்டுமா??


RT @Ramutamilan கழுதையை விடுங்கள்!!கடவுளுக்குத் தெரியுமா கற்பூர வாசனை??


RT @karna_sakthi எழுதுகோலைவிட உலகத்தில் உயர்ந்தது ஒன்று உண்டென்றால் அது உழவனின் கலப்பை மட்டுமே via @kalasal


ஃபோட்டோ எடுக்கையில் என்னையே பார்த்தார்கள்; ஃபோட்டோ வந்ததும் தன்னையே பார்த்தார்கள்.! #ஒரு ஃபோட்டோகிராபரின் புலம்பல்


யார் கண்டது? `மரணம்`...நாம் நினைப்பதைவிட,மகிழ்வான ஒரு அனுபவமாக இருந்திருக்கலாம்...மரணித்தவர்களுக்கு!


சில ரகசியங்களை மனத்திற்குள் பூட்டிவைப்பதே சிறந்தது! அதுதான் நம் வலிமையை அவ்வப்போது நமக்கே உணர்த்தும்!


ஒரு வேலையை நீ ஆரம்பித்தாலே அது 60% முடிந்துவிட்டதாக அர்த்தம்..# சோ ஆரம்பி.


இறந்த பிறகே தரிசனம் தரும் கடவுளுக்கு எதற்கு  நிகழ்கால பூஜை??


புற்களின் எண்ணிக்கையைக் குறைக்க மானையும் மானிற்கு புலியையும் புலிக்கு மனிதனையும் மனிதனுக்கு மனிதனையுமே படைத்தது கடவுளின் சிறப்பு.#வன்முறை.


RT @Balu_SV சாதிபேதம் பாராமல் தன்னலமன்றி உழைத்த தலைவர்களை சாதிக்கட்சி பேனர்களில் பார்க்கும்போதெல்லாம்,வேதனையில் வேகிறேன்


RT @Butter_cutter இந்த அனுபவம் கொண்டு திரும்பவும் தவறு செய்யாமல் குழந்தை பருவத்தில் இருந்து இன்னொரு வாழ்க்கை வாழ ஆசை !


RT @mayakannan: நூலகத்தின் அடர்ந்த அமைதியை கிழித்துப்பார்த்தேன், ஓங்கி ஒலித்தது எழுத்தாளனின் உரத்த சிந்தனை


Thanks to my twitterers


Published with Blogger-droid v2.0.4