இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.
அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம்.
இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை பெறும் வழிமுறைகளைப் பற்றி இன்றைக்கு பார்க்க போகிறோம்.வேறொருசி.டி.யில் இருந்து தகவல்களை, வீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள், பதிந்திருக்கும்தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
எனவே, முதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும். சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்.
நீங்கள் இந்த(http://isobuster.com/) இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும்.
இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம். நண்பர்களே இன்னும் சிக்கல் விழுந்த சி.டி.க்களை தூக்கி வீசாமல் தகவல்களை பெற இந்த வழியில் முயற்சித்து பாருங்கள். — withSelva Kumar
(இன்று ஒரு தகவல் பக்கம்)
Saturday, 2 March 2013
கணினியில் ஒரு விஷயம்
Wednesday, 13 February 2013
விடைத்தெரியாமலே… (சிறுகதை)
“பார்த்துப் போயிட்டு வாப்பா... போனவுடனே போன் பண்ணு...”
“சரிய்யா... இதையே எத்தன வாட்டி சொல்லுவ. நான் என்ன சின்னப் பையனா?
சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு. வேலைல சேர்ந்துட்டு
சாயங்காலமா போன் பண்றேன். பெரிய ஐயாவையும் பார்த்துட்டு எப்படி
இருக்கார்னு சொல்லுறேன். அவர்ட்ட நான் யாருன்றத சொல்லல. போதுமா?
அப்புறம்...”
“வேற ஒண்ணும் இல்லப்பா?”
“சரி. பஸ்ஸு கிளம்ப போகுது. நீ வீட்டுக்குப் போ. அம்மாட்ட சண்ட
வச்சிக்காத. நான் போயிட்டு மத்ததை போன்ல சொல்லுறன்” குமரேசன்
சொல்லிமுடிக்க பேருந்தும் கிளம்பியது.
குமரேசனுக்குத் தனியார் வங்கியில் காசியராக வேலை கிடைத்துள்ளது. இன்று
பணியில் சேருவதற்காகதான் பயணம். அவன் ஐயா (தந்தையை அப்படிதான் அழைப்பான்)
ராமலிங்கத்தின் சொந்த ஊரில்தான் வேலையும்கூட. அவனுக்கும் அந்த ஊர்
எட்டுவயது வரை பரிட்சயம்தான். இப்போது அவனுக்கு அவ்வளவாக அந்த ஊர்
ஞாபகத்தில் இல்லை. அவனது பெரிய ஐயா முத்துவேலின் முகம் மட்டும் இன்னமும்
அவனது நினைவில். அவரது பெரிய மீசையும் கனீரென்ற குரலும் கருப்பான
மிடுக்குத்தோற்றமும் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் அவனது நினைவில்
இருக்கும்.
அவன் பட்டணத்துக்கு வந்த நாள் முதல், அவன் ஐயா வாரம் ஒருமுறையாவது சொந்த
ஊர் பெருமையையும் தன் அண்ணனின் பெருமையும் இதுவரை பலமுறை
சொல்லியிருக்கிறார். பிறகு, எப்படி மறக்க முடியும்? அவர் சொன்ன
ஒவ்வொன்றையும் நினைத்துக்கொண்டே அவனது பயணம் போய்க்கொண்டிருந்தது.
“இங்கலாம் எங்கேயா சந்தோஷம் இருக்கு. எங்க ஊரு வயக்காட்டப் பார்த்தாலே
சந்தோஷம் தானா வந்துடும். பகல்ல குருவி சத்தம், ராவுல தவளை சத்தம்னுட்டு
எவ்வளவு ரம்மியமா இருக்கும். பட்டணத்துல பஸ்ஸும் லாரியுமா சத்தம் கேட்டு
கேட்டு காதே அடச்சிப் போச்சி. அடுத்தவங்களுக்கு ஒண்ணுனா உசிரயே
கொடுப்பாங்க. இங்க உசிரே போனாலும் கண்டுக்க மாட்டாறாங்க. உலகத்த
சுருக்கிக்கிட்டு கம்ப்யூட்டரே கதினு இருக்காங்க. அப்படி என்னத்ததான்
சாதிக்கப் போறாய்ங்களோ?” அவ்ர் சொன்னதில் அர்த்தம் இல்லாமல் இல்லை என்பது
அவனுக்குத் தெரியும்.
அவர் இதோடு விடாமல் அவர் அண்ணனைப் பற்றி இவனிடம் புலம்பியதுதான் அவனுக்கு
இன்னும் நினைவில் வருகிறது. “நான் தப்பு பண்ணிட்டேன்யா. என் அண்ணன்ட்ட
சண்டயிட்டுட்டு பட்டணத்திற்கு வந்திருக்கக் கூடாது. எல்லாம் இவளாலதான்.
இல்ல இல்ல இவ அப்பனாலதான். பட்டணத்துல கடை வச்சுத்தாரேன் நிலத்தை
வித்துட்டு வரச்சொல்லுன்னு இவமூலமா என்னய செய்யவச்சிட்டான். அப்பவந்த
தகராறுலதான் தான் சாவுற வரைக்கும் உங்குடும்ப சவகாசமே வேணாம்ட்டாரு.
அவருக்கு நிலம்தான்யா உசுரு. காணி நிலம் போதும் என் காலம் அதுல போகும்னு
அடிக்கடிச் சொல்லுவாரு.” அவன் பக்கத்தில் அவன் ஐயா உட்கார்ந்து
சொல்லிக்கொண்டே வருவது போலவே இருந்தது அவனுக்கு.
கொஞ்ச நேரம் போயிருக்கும். அவன் அம்மா போனில் அழைத்தாள்.
“என்னம்மா?”
“அங்க இவரு சொல்றாரேனு உன் பெரியப்பாரப் போயிலாம் பாக்காத! ஏதாவது
தொல்லைக் கொடுத்துட போRaறாங்க. வேலைய பாத்தோமா வீட்டுக்கு வந்தோமானு
இருக்கனும். அவங்க சவகாசம்லாம் உனக்கு வேணாம்பா.”
“சரிம்மா. எத்தனவாட்டிதான் நீயும் சொல்லுவ. முதல போன வை. சிக்னலு சரியா
கிடக்கல” அழைப்பைத் துண்டித்தவன் ஐயாவும் இன்னும் மாறல அம்மாவும் இன்னும்
மாறல என வாய்விட்டே சொன்னான்.
இருந்தாலும், அவன் ஐயா சொன்னதே அவனுக்கு நினைவில் வந்தது. “இப்பலாம் எவன்
நேர்மையா, தன்னம்பிக்கையா இருக்கான். தொழில்ல கொஞ்சம் நஷ்டம்னாலும்
அடுத்தவன ஏமாத்தித் திருடுறான். இல்ல தற்கொலை செஞ்சிக்கிறான். நேர்மை,
தன்னம்பிக்கைனா அது என் அண்ணன் தான்யா. என்ன உழைப்பு! உரம் வாங்குறதும்
உழுவறதும் விதைக்கிறதும் அறுக்கறதுமா எவ்ளோ அலைச்சலா இருந்தாலும் ஒண்டியா
செய்வாரு. அலைச்சலில்லாம விளைச்சலில்லம்பாரு. யாருகிட்டயும் கைக்
கட்டிகூட நின்னதில்ல. முததடவையா நிலத்தைப் பங்குப் போடனும் சொன்னப்ப
இவக்கிட்ட கையெடுத்துக் கேட்டாரு. என்ன பண்றது? எல்லாம் விதி. அவர
எதிர்த்துட்டு வரவேண்டியதாப் போச்சு. எனக்கு ஒரே வருத்தம் என்னனா சாவுற
வரைக்கு எங்குடும்ப சவகாசமே வேணாமுனுட்டாரு. ரோசக்கார ஆளு. அதான்
இதுவரைக்கும் நான் அந்த ஊர்ப்பக்கமே போனதில்ல. நீ பார்த்தாலும் யாருனு
சொல்லிப்புடாத” அவர் சொன்ன வார்த்தைகளை அசைப் போட்டுக்கொண்டே ஊரை
வந்தடைந்தான் அவன்.
ஊர் அவனுக்கு பரிட்சயமானதாய் இல்லாவிட்டாலும் அவன் ஐயா சொன்ன வழியிலே
பாங்கைத் தேடினான். பாங்கைக் காட்டிலும் அவனது பெரிய ஐயாவைத் தேடுவதில்
அவன் மனம் இருந்தது. வழியில் தென்பட்டோரை எல்லாம் தமக்கு தெரிந்தவர்களாக
இருக்கிறார்களா? பெரிய ஐயா எங்கேயாவது வழியில் செல்கிறாரா? எனப்
பார்த்தபடியே நடையிட்டவன் கொஞ்சம் நேரத்தில் பாங்கை அடைந்தான். மணி
சரியாய் 10.00 ஆக ஆகியிருந்தது.
மேனேஜரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட
வேலைக்குரிய சீட்டில் போய் அமர்ந்தான். பாங்கு முடிந்ததும் பெரிய ஐயாவைப்
போய்ப்பார்க்கலாம் என முடிவெடுத்தவன் அப்படியே வேலையில் மூழ்கிப்போனான்.
சிறிது நேரம் சென்றது.
“ஐயா சாமி! நகை கடனு வக்கனும்ங்க. பாரத்தலாம் எழுதி வாங்கிட்டு
வந்துட்டேங்க. அப்புறம் என்னயா செய்யனும்?” குரல் வந்த திசையில்
நிமிர்ந்து பார்த்தான். யாரைப் பார்க்க ஆவல் பட்டானோ அவர்தான். குரலிலும்
சரி உடலிலும் சரி கம்பீரம் குறைந்துதான் போயிருந்தது.
“அவரா இப்படி?” நம்ப முடியாமல் கேட்டான், “ஐயா பெரியவரே! உங்க பேருங்க”
“முத்துவேலுங்க சாமி!”
“ஐயோ! பெரிய ஐயான்னு கூப்பிட வேண்டியவரை ஐயா பெரியவரேனு
கூப்பிட்டுட்டோமே” மனம் கலங்கியது. வார்த்தைகளும்தான். மீண்டும்
தழுதழுத்தக்குரலில், “ஏங்க எதனால?” என்ன கேட்க வேண்டும் எனத் தெரியாமலே
கேட்டான்.
“விவசாயம் ரொம்ப செத்துடுச்சிங்க. பருவத்துக்குப் பொய்ய வேண்டிய மழையும்
பொய்லீங்க. கடனுக்கு வாங்குன உரம், விதை, ஆள் உழைப்பு எல்லாம்
வீணாப்போச்சுங்க. கொடுத்த நிவாரணலாம் யானைப் பசிக்கு சோளப்பொறி
மாதிரிங்க. வாங்குன கடன கொடுக்கதான் இருந்த நகைய வக்க வந்தேங்க. இங்கதான்
நகைக்கடனு கிராமுக்கு அதிகம்னாங்க. அதனாலதான் சாமி...”
அவன் கண்களில் கண்ணீர் வரத்துடித்துக் கொண்டிருந்தது. என்ன செய்வது
தெரியாமல் முதலில் நகைக்கான கடனைத் தர ஏற்பாடு செய்தான்.
“ஐயா சாமி ரொம்ப நன்றிங்க. உங்க ஐயன் ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கனும்ங்க.”
“உங்க புள்ள?”
“அவனா சாமி. எழுதப்படிக்க தெரிஞ்சா போதும்னு எட்டாவகுப்போட
நிப்பாட்டிட்டு ஒத்தாசைக்கு அழச்சிக்கிட்டேனுங்க. பக்கத்து ஊர்ல காவாய்
போடுறதுக்கு கூலிக்கு போயிருக்காப்புல”
எல்லாமும் முடிந்து பணமும் கொடுத்தான் அடிமனதில் கலக்கத்தோடு.
“இந்த முறைதான் ஏமாந்திட்டேன் சாமி. அடுத்தவாட்டி எஞ்சாமி மழைக்
கொடுப்பாப்புல. அப்ப சாகுபடி செஞ்சி வச்ச நகைய வாங்கிடுவேனுங்க.
வரட்டுங்கலா..” கலங்கிய கண்களுடன் தன்னம்பிக்கையோடு சொல்லிவிட்டு
சென்றார்.
“ஐயா சொன்னது சரிதான். எவ்வளவு தன்னம்பிக்கை அவருக்கு” மனதுக்குள்
நினைத்தவனுக்கு முதல்நாள் வேலைக்குச் சென்ற மகிழ்ச்சி சிறிதுமில்லை.
பெரிய ஐயாவை நினைத்து மதியம் அவன் சாப்பிடவும் இல்லை. சாயங்காலம் பாங்கு
கணக்கு முடித்துவிட்டு வெளியில் வந்தான். அவனது ஐயாவிடம் என்ன சொல்லுவது
என யோசித்துக் கொண்டிருக்கும்போது சிலர் அவ்வழியே கூட்டமாய் ஓடுவதைக்
கண்டான். காரணம் என்னவென்று ஒருவரிடம் விசாரித்தான்.
“மீசை முத்துவேலு தூக்குப்போட்டுக்கிட்டாருங்க. தன்னம்பிக்கையான ஆளுங்க
எப்படித்தான் இப்படி ஒரு முடிவு எடுத்தாரோ? நகைய வச்சி வாங்குன கடன
கொடுத்துட்டு நேர்மையாப் போய் சேர்ந்துட்டாரு. சாகுபடிய
நம்பிக்கிட்டிருந்தா சாகும்படி செஞ்சிட்டாங்க. யாரைக் குறை சொல்ல?”
சொல்லிவிட்டு அவன் ஓடினான்.
“இனி ஐயாவிடம் என்ன சொல்லுவேன். ஏன் இப்படி? விவசாயிகளின் நிலை இதுதானா?”
விடைத்தெரியாமலே குமரேசனும் ஓடினான் அக்கூட்டத்தோடு. இம்முறை குமரேசனின்
கண்கள் நிச்சயம் குளமாகியிருக்கும்.
எழுத்தும் கருத்தும்...
செ.ஆனந்தராஜா