Sunday, 13 November 2011

கனவுகள்

கனவுகள் மனதின் உள்ள ஆசைகளின் வெளிப்பாடுகளென அறிவியலும் எதிர் காலத்தைக் கூறுகின்றன என அறிவியலற்ற கருத்துகளும் கூறுகின்றன. உண்மையில் கனவைப் பற்றிய ஆராய்ச்சி இன்னமும் முழுமை பெறவில்லை. கனவைப் பற்றி ஆராயந்த ஸிகமண்ட் ஃப்ராய்ட், மனம் வலிமை பெற்ற ஆசைகளை அடைய மேற்கொள்ளும் ஊடகமே கனவு என்கிறார். சில நிஜமாகின்ற்ன. காரணம் மனம் அதன் வழியைக் கூறுவதே. அறிவியலில் பென்சீன் குறியீடு உருவானது இப்படியே. எல்லாக் கனவுகளும் நினைவில் இருப்பதில்லை. உலகில் பெரும்பாலானவர்களுக்கு பறப்பது போலவே கனவு ஏற்படுகிறது. சிறு வயதில் குழந்தைகளைத் தூக்கி மேலே போட்டு விளையாடுவதால் அக்குழந்தை மனதில் பதியும் ஆசையே வளரும்போது இதுபோன்ற கனவினை உண்டாக்குகிறது. கனவுகள் கருப்பு, வெள்ளை நிறத்தில்தான் ஏற்படுகிறது. பாம்பைக் கனவில் கண்டால் பயம்கொள்ள தேவையில்லை. பாம்பு பிரச்சினையின் சின்னம். அது நம்மைக் கடித்தால் பிரச்சினை முடிவு பெறும். நாம் அதை அடித்தால் புது பிரச்சினை உண்டாகும் என அறியப் படுகிறது.